Saturday, December 21, 2019

தத்துவச் சிதறல்கள் - வெண்பாவில் வடித்த அந்தாதிக் கவிதைகள்

மறுத்திடுவோம் அற்ப மடமையை, நெஞ்சில்
நிறுத்திடுவோம் ஞானம் கொடியை,  - அறுத்திடுவோம்
பொய்ம்மைப் பலசொல்லும் போக்கினையே  முன்போலே
மெய்ம்மை மலரச் சிறந்து.

சிறந்திடும் சிந்தை, திடங்கொள்ளும் நெஞ்சம்,
பிறந்திடும் பாரிற்பே ரிணக்கம் - அறந்தகர்க்கும்
பேதங்கள் தாம்நீங்கித் தேசங்கள் சேர்ந்திருந்தால்
தீதற்ற நன்மை நமக்கு.

நமக்கு விழிசேர்நற் பார்வையெனும் தீயால்
இமைக்கும் பொழுதிலிருள் போகும் - சுமக்கின்ற
சோகங்கள் நீங்கச் சுடர்விடுமே பொய்ம்மையெனும்
மேகத்தில் மறையும் மதி.

மதிநலம் வாய்க்க மனச்சாந்தம் மலர
விதியினை நாளும்நாம் வெல்வோம் - சதிசெய்யும்
கேடுற்ற பொய்ம்மைக்குக் கீழ்ப்படியோம் தீமைசேர்
மூடர்சொல் மொழியை மறுத்து.

No comments: